என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மகன் மரணம்"
பழனி அருகே ஆயக்குடியை சேர்ந்தவர் சிவபிரகாசம். அவரது மனைவி சுகுணா (வயது 42). இவர்களது மகன் அஜித்குமார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு வாகன விபத்தில் இறந்துவிட்டார். மகன் இறந்த துக்கத்தை மறக்கமுடியாமல் சுகுணா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
கடந்த 3-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத போது, சுகுணா மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயங்களுடன் அலறித்துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுகுணா இறந்தார்.
இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேட்டவலம்:
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் கிணறு ஆழப்படுத்தும் பணியில் கெங்கனந்தல் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் சீத்தாராமன், தங்கராஜ், குமார் ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் சீத்தாராமன் உள்பட 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
வெடி விபத்தில் சீத்தாராமன் இறந்ததால் அவருடைய தாய் சரோஜா (வயது 66) மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். மனவேதனை தாங்க முடியாமல் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
சரோஜாவை உறவினர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வேட்டவலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இறந்தவர்களின் சோகத்தை மறப்பதற்குள் சரோஜா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கெங்கனந்தல் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சுரண்டையை சேர்ந்தவர் கமலா மிஷியர் (வயது 69). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 3-வது மகனான குட்வின் (40) வெளிநாட்டில் கப்பல் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கமலா மிஷியர் இவர் மீது அதிக பாசம் வைத்து இருந்தார். குட்வினும், தாயாரிடம் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குட்வின் விடுமுறையில் ஊருக்கு வந்தார். இந்த நிலையில் கமலா மிஷியருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே நேற்று முன்தினம் நெல்லையில் உள்ள ஒரு ஸ்கேன் மையத்துக்கு குட்வின் தனது தாயாரை காரில் அழைத்து சென்றார். அங்கு ஸ்கேன் எடுத்த பிறகு ஊருக்கு புறப்பட தயாரானார்கள்.
அப்போது கமலா மிஷியர் திடீரென மயங்கி விழுந்தார். டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டதாக கூறினர்.
பின்னர் கமலா மிஷியர் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. தாயார் உடலை பார்த்து அழுதபடியே குட்வின் இருந்தார். அவர் உடல் சோர்ந்து காணப்பட்டார்.
இதற்கிடையே கமலா மிஷியர் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. திடீரென குட்வின் மயங்கி விழுந்தார். உடனே அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தாய் இறந்த துக்கம் தாங்காமல் குட்வின் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.
தாய்-மகன் இருவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது. அன்னையர் தினமான நேற்று தாய்- மகன் இருவரது உடல்களும் ஒரே இடத்தில் அருகருகே அடக்கம் செய்யப்பட்டன.
இறந்த குட்வினுக்கு மனைவியும், 3 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்